Oct 18, 2010

// // Leave a Comment

மாற்று மத தலைவர்கள் அணி வகுக்கும் நீதிமன்ற முற்றுகைக்கு... தயாராகி விட்டீர்களா?

அன்பிற்குரிய சமுதாய சொந்தகங்ளே!

இன்ஷா அல்லாஹ் வரும் செவ்வாய் கிழமை (19.10.2010) காலை 11 மணியளவில் நடைபெற இருக்கும் நீதிமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு நடுநிலை பேணும் மாற்று மத சமுதாயத்தின் தலைவர்கள், தேவநாதன், திருமாவளவன், கிருஷ்ணசாமி, சுப.வீரபாண்டியன், டி.எஸ்.மணி உட்பட மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்கள் வருகை தர இருக்கிறார்கள்.

வணங்கப்படக்கூடிய இறைவன் ஒரே ஒருவனே! அவனை மட்டுமே வணங்க நம் பணத்தில் கட்டிய பள்ளிவாசலை தாரை வார்த்து கொடுத்த நீதிமன்ற தீர்ப்பை கண்டிக்க களம் இறங்கிய இந்த நடுநிலை பேணும் சகோதரர்களுக்கு இருக்கும் அக்கரை நமக்கு இல்லையா? யாருக்கோ வந்த விதி? என பொடு போக்காக இருக்க போகிறீர்களா?

சென்னையில் குடியிருக்கும் இஸ்லாமிய சமுதாயமே! அல்லாஹ்வி்ன் பள்ளி மீட்க அணி திரண்டு வா! ஒரு சில மணி நேரத்திற்கு உன் வியாபாரங்களை மூடி விட்டு, ஏக இறை இல்லம் மீட்க எடுக்கும் நடவடிக்கைக்கு இயக்க வேறுபாடு இன்றி விரைந்து வா!

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டத்தைச் சேர்ந்த இஸ்லாமிய சமுதாயத்தின் எங்கள் இரத்தங்களே! உங்களுக்கு ஓர் பணிவான வேண்டுகோள்!

உங்கள் ஊரிலிருந்து 3 மணிநேரத்திற்குள் சென்னைக்கு பயணம் செய்து விடலாம். பயணக்கட்டணமும் மிகக் குறைவுதான். தயவு செய்து அல்லாஹ்க்கான இந்த விஷயத்திற்காக அக்கரையுடன் விரைந்து வாருங்கள்.

வளைகுடா மற்றும் வெளிநாட்டு வாழ் சொந்தங்களே!

உங்களால் முடிந்த பண உதவிகளை வாகன போக்குவரத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லாஹ்வின் பள்ளியினை மீட்க நீங்கள் அனுப்பும் ஒரு திர்ஹம், ஒரு ரியால், ஒரு ரிங்கிட் உட்பட நீங்கள் வாழும் தற்போதைய நாட்டின் பணங்கள் நம் நாட்டு பண மதிப்பில் பல மடங்கு என்பதை நாம் அறிவோம்.

ஆகவே, அல்லாஹுடைய விஷயத்திற்கு அள்ளி, அள்ளி வழங்குங்கள். வல்ல ரஹ்மான் உங்கள் மீது வற்றாத கருணையை பொழிவான்.

வஸ்ஸலாம்

அழைக்கிறது...... இந்திய தவ்ஹீத் ஜமாஅத்

0 comments: