Elise - A Responsive Blogger Theme, Lets Take your blog to the next level using this Awesome Theme

This is an example of a Optin Form, you could edit this to put information about yourself or your site so readers know where you are coming from. Find out more...


Following are the some of the Advantages of Opt-in Form :-

  • Easy to Setup and use.
  • It Can Generate more email subscribers.
  • It’s beautiful on every screen size (try resizing your browser!)

Oct 14, 2013

// // Leave a Comment

எஸ்.எம்.பாக்கர் வெளியிட்டுள்ள பெருநாள் செய்தி!

தியாகத் திருநாள் என்கிற பெருநாளை முஸ்லிம் சமுதாயம் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இந்நன்னாளில் இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் சார்பில் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்வுறுகிறேன்.இப்ராஹீம் நபியின் வாழ்க்கையை மனித குலத்திற்கு படிப்பினையாக ஆக்கி, அவரது பாதையை முன்மாதிரியாக காட்டித்தருகிறான் இறைவன்.

படைப்புகள் கடவுள் அல்ல; படைத்தவனே கடவுள் என்ற கொள்கையை முன்வைத்து பிரச்சாரம் செய்ததால் ஏகத்துவ இமாம் இப்ராஹீம் நபி என அவரை முஸ்லிம்கள் போற்றுகிறார்கள்.ஆயுதத்தை அவர் கையில் ஏந்தவில்லை;அறிவாயுதத்தை ஏந்தினார். மூட நம்பிக்கைகளை அறிவுப்பூர்வமான வாதங்கள் மூலம் தகர்த்தெறிந்தார்.

சாதி,மதம், இனம்,மொழி,பணக்காரன், ஏழை என எந்த ஏற்றத் தாழ்வுகளும் இல்லாமல் உலகளாவிய சகோதரத்துவத்தை, ஒற்றுமையை வலியுறுத்தும் சர்வதேச மாநாடான ஹஜ் கடமை நபி இப்ராஹீம் குடும்பத்தை மையப்படுத்தியே இன்று முஸ்லிம்கள் நிறைவேற்றி வருகிறார்கள்.அதனால் தான் இப்ராஹீம் நபியை தனி மனிதர் என்று கூறாமல் அவர் ஒரு சமுதாயம் என இறைவன் அடையாளப்படுத்துகிறான்.

உலகம் இன்று அமைதியை தேடி அலைந்து கொண்டிருக்கிறது... சாதி மத ஏற்றத்தாழ்வுகள்,உயிர்பலிகள்,பெண்கள் குழந்தைகள் மீதான வன்முறை; பொருளாதார சுரண்டல்,மத மோதல்கள்,சுயநலஅரசியல்; மனித உரிமை மீறல்கள் என மனித விரோத செயல்கள் மலிந்து போனதால் பூமிப் பந்தில் அமைதி தொலைந்து கொண்டிருக்கிறது.
இந்த அமைதி தொலைந்து போக காரணமான மனித குல விரோதிகளை அடையாளம் கண்டு வேரறுப்போம்;வகுப்புவாத சக்திகளை இனம் கண்டு தனிமை படுத்துவோம்;பயங்கரவாதம் எந்த வடிவில் வந்தாலும் அதனை வீழ்த்த தியாகம் செய்வோம்.

மனித உரிமை மீறல்களுக்கு எதிராக அறப்போர் புரிவோம்;இந்தியா ஜனநாயக தன்மையை இழந்துவிடாமல் காக்கும் பணியில் நம்மை அற்பணிப்போம் இதற்காக எந்த தியாகத்தையும் செய்ய,அமைதியும், நல்லிணக்கமும்,ஒற்றுமை உணர்வும் தழைக்க இந்த தியாக திருநாளில் உறுதி ஏற்போம்.

இவ்வாறு பெருநாள் வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார் எஸ்.எம்.பாக்கர்
Read More

Jun 8, 2012

// // Leave a Comment

நீதி கேட்டு நெடும்பயணம் !!!

Read More

Feb 13, 2012

// // Leave a Comment

பிப்ரவரி-14:களிடைகள் தினம்!!

வாலண்டைன் டே'/காதலர் தினம் என்ற பெயர்களில் காதல் போர்வையில் ஒளிந்துள்ள காமுகர்களுக்கு வசதிசெய்யும் வகையில் பிப்ரவரி-14 ஐ உலகெங்கிலும் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கி விட்டது.

வருடம் முழுவதும் பல்வேறு சுரண்டல்கள் மூலம் வயிறு பெருக்கும் முதலாளிகளுக்கு இந்தகொண்டாட்டம் மூலம் கனிசமான வருவாய் கிட்டும் என்பதால் இதற்கான விளம்பரங்களை ஊடகங்கள் மற்றும் அனைத்து மக்கள் தொடர்பு சாதனங்கள் மூலமும் பரப்பி வருகின்றனர்.

வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கவுள்ள இளந்தலைமுறையினர் அதுகுறித்த புரிதல்களை வளர்த்துக்கொள்ள எந்த பெற்றோரும் எதிர்களல்லர். ஆனால், அதற்கான வழிமுறை என்ற பெயரில் கையாளும் மோசமான வழிகளே எதிர்ப்புகளை உருவாக்குகின்றன. இத்தகைய கொண்டாட்டங்களை எதிர்ப்பவர்களில் முன்னாள் காதலர்களான இன்றைய பெற்றோரும் உட்படுவர் என்பதால், காதலர் தினம் என்ற பெயரில் கூத்தடிக்கும் காமுகர்கள் தினத்தை எதிர்ப்பது, ஒழுக்கம் பேணும் சமூகத்தின் மீதான தார்மீகக் கடமையாகும்.

இன்னொரு பக்கம், இந்தத் தினத்தில் கலாச்சார சீரழிவைத் தடுக்கிறோம் என்ற பெயரில் கர்நாடக சட்டசபையில் பலான கலாச்சாரத்தைக் காத்தவர்களும் களமிறங்குவார்கள். இதன் பின்னணியில் ஒரு கலாச்சாரமும் இல்லை; கத்தரிக்காயும் இல்லை. காதலிக்காக உயிர்விட்ட வாலண்டைன் என்பவர் ஓர் கிறிஸ்தவர் என்பதால், மதம்சார்ந்த எதிர்ப்புதானேயன்றி வேறில்லை! இவர்களுக்கு நம் கலாச்சாரத்தைக் காப்பதில் உண்மையான அக்கரையிருந்தால் 'ஹோலி' என்ற பெயரில் வண்ணக் கலவைபூசி, கையில் ராக்கி கட்டும் கலாச்சாரத்தையும், வடநாட்டு இறக்குமதி செய்யப்பட்டு சகோதரர்களாகப் பழகிவருபவர்களை மதரீதியில் பிரிக்கும் வன்முறைக் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தையும் எதிர்க்கவேண்டும்.

ஏன் சார், ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக்கொள்வதுகூடத் தவறா? என்று அப்பாவியாகக் கேட்பவர்களும் உள்ளனர். ஐயா! பெற்றோர்கள் ஆசியுடன் திருமணம் செய்து கொண்டு பிப்ரவர்-14 மட்டுமல்ல, வருடம் முழுவதும் அன்பை பரிமாறினால் யாரும் கலாச்சார கூக்குரலிடப் போவதில்லையே! அன்பு என்பது ஓர் உணர்வு. அனைத்துஜீவராசிகளும் தமது துணையுடன் அன்பு கொள்வதும் வெளிப்படுத்துவதும் இயற்கை நியதி.

அன்பு மிகைத்தால் அது கலவியில் முடியும்! தாய்-மகன், தந்தை-மகள்,ச கோதரன்-சகோதரி என்பதாக எத்தனையோ உறவுகளை நாம் உருவாக்கிக் கொண்டபோதிலும் அவர்களின் அன்புப் பரிமாற்றம் இவற்றிலிருந்து விதிவிலக்கு. சமவயது இளைஞனும் - இளைஞியும் பரிமாறிக்கொள்ளும் அன்பு அவ்வாறல்ல; ஊசலாட்டத்திற்கான வழிகள் மலிந்துள்ள சூழலை உருவாக்கிவிட்டு அறநெறி தவறாது இவர்களால் அன்பைப் பரிமாறுவது அரிதினும் அரிதே!

உன்னை மாதிரி பெருசுகள் என்னதான் சொன்னாலும் அன்பை வெளிப்படுத்தியே தீருவோம் என்று ஒற்றைக்காலில் நிற்பவர்களுக்கு ஏதோ நம்மால் முடிந்த இலவச ஆலோசனைகள்!

1) வாழ்த்து அட்டைகளுக்குச் செலவளிக்கும் தொகையை அனாதை இல்லத்திற்கு நன்கொடையாகக் கொடுத்தால், பெற்றோரின் அன்புக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் குழந்தைகளின் ஒருநாள் உணவுக்குப் பயன்படும்.

2) பரிசு, புத்தாடை மற்றும் சாந்தோம், பெசண்ட்நகர் பீச் முதல் PIZZA, KFC என்று கடலை போட செலவளிக்கும் தொகையை, பிள்ளைகளின் அன்புக்காக ஏங்கிக்கொண்டிருக்கும் முதியோர் இல்லத்திற்குக் கொடுத்தால் அது அவர்களின் ஒருமாத செலவுகளுக்குப் போதுமானது.

3) இவையன்றி தானே புயலால் வீடிழந்து, வாழும் வழிகள் அடைபட்டு மத்திய/மாநில அரசுகளின் உதவிக்காக ஏங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அன்போடு வழங்கலாமே!

இவ்வாறு நல்லவை செய்வதற்குச் சொல்வதால் நாங்கள் பெருசா?

எழுதி வைத்துக்கொள்ளுங்கள் இன்றைய இளங்காதலர்களே! கொஞ்ச-நஞ்சம் நம்முடன் ஒட்டிக் கொட்டிருக்கும் சமூகக் கட்டுப்பாடுகள் சிதையாமல் விட்டு வைத்திருந்தால், பிப்ரவரி-14, 2032 இல் நீங்களும் இதைத்தான் சொல்வீர்கள்!

- அதிரைக்காரன்

நன்றி :இந்நேரம்
Read More

Feb 4, 2012

// // Leave a Comment

ஜும்ஆ பயான் ஓர் அறிமுகம் !

இன்ஷா அல்லாஹ் ஒவ்வெருவாரமும் மாநில தலைமையகத்தில் நடைபெறும் குத்பா பேருரையை நமது அதிரை INTJ வலைதளத்தில் ஒலிவடிவில் பதிவேற்ற உள்ளோம் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துகொள்கிறோம் .

அதன் படி இந்த வாரம்(03 /02 2012) நடைப்பெற்ற குழந்தை வளர்ப்பும் இஸ்லாமும் என்ற தலைப்பில் மாநில பேச்சாளர் முகமது முகைதீன் அவர்களின் குத்பா பேருரையின் ஒலிப்பேழை இன்ஷா அல்லாஹ் இன்று காலை 11 மணிக்கு நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்பதை வாசகர்களுக்கு தெரிவித்துகொள்கிறோம் .

வாசகர்கள் இந்த முயற்ச்சிக்கு ஒத்துழைப்பும் ஆதரவும் தந்து உதவிட வேண்டும் என அதிரை INTJ தளத்தின் சார்பில் கேட்டு கொள்கிறோம் .
Read More
// // Leave a Comment

மாமியாரை கரை சேர்த்த மருமகள் !


தமுமுக வின் துவக்க காலத்தில் பிலால் எனும் இஸ்லாத்தை ஏற்ற சகோதரருக்கு ஹபிபா எனும் இஸ்லாத்தை ஏற்ற பெண்ணை மண முடித்து வைக்கப் பட்டு இவர்களின் இல்லற வாழ்வில் இரண்டு குழந்தைகளும் இருக்கும் நிலையில் பிலால் எனும் அந்த சகோதரர் போதை பழக்கத்தில் வீழ்ந்து பாதை தவறினார். இதனால் கணவன் மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்தாலும், மாமியாரை கை விடாமல் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து குழந்தைகளையும் அவரையும் காப்பாற்றி வந்தார்.

கணவனோடு இருக்கும் போதே மாமியாரை மதிக்காத இன்றைய பெண்கள் மத்தியில் கணவனை பிரிந்தாலும் அவரை பெற்ற தாயை பேணிப் பாது காத்த இந்தப் பண்பால் அந்தத் தாய் இஸ்லாத்தை ஏற்று மீதியிருக்கும் காலத்தையும் தன மருமகளோடு, அவள் பெற்ற தன் பேரக் குழந்தைகளோடு, அற்புதமான் இந்த இஸ்லாமிய மார்கதோடும் இணைந்து வாழ விரும்பி மருமகளிடம் விருப்பத்தை தெரிவிக்க நேற்று 2.2.12 அன்று .தலைமையகம் அழைத்து வந்தார். அவருக்கு இஸ்லாத்தின் தூய கலிமாவை எஸ்.எம்.பாக்கர் சொல்லிக் கொடுக்க குணாம்மால் எனும் அந்த தாய் பாத்திமா எனும் பெயருடன் இஸ்லாத்தை ஏற்றார்.அல்ஹம்து லில்லாஹ்.
Soure: sengiskhan online

Read More