பீஜெயிக்கு குழப்பவாதி என்று தொன்று தொட்டு ஒரு பெயர் உண்டு. அந்த குழப்பவாதி இப்போது இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தில் குழப்பம் செய்யும் வேலையை செய்து வருகிறார். ததஜ விலிருந்து நீக்கப்பட்ட பாக்கர் தனது ஆதரவாளர்களுடன் இணைந்து உருவாக்கியதுதான் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என்பதை உலகறியும்.
பாக்கர் இந்த ஜமாஅத்தை உருவாக்குவதற்கு முன் இந்த பெயரில் எந்த அமைப்புமில்லை. இந்த பெயர் மக்களுக்கு அறிமுகமானதும் இல்லை. பீஜேயும் அவரை பின்பற்றுபவர்களும் பாக்கர் தொடங்கியுள்ள இந்த ஜமாஅத் 'லெட்டர் பேடு' ஜமாத்தாக இருக்கும் என்று இருமாந்திருந்த வேளையில், தனது சீரிய பனியால் அவதூறுகளை கடந்து ஆலவிருட்சமாக வளர்ந்தது இந்திய தவ்ஹீத் ஜமாஅத்.
பொறுக்குமா பிரபல ஆக்கிரமிப்பாளர் பீஜேவுக்கு? சிலரை தூண்டிவிட்டு இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தை சங்கங்கள் பதிவேட்டில் பதிவு செய்து, சான்றிதழ் பெற்று இப்போது இந்திய தவ்ஹீத் ஜமாஅத் எங்களுக்கே சொந்தம் என்று லாவணி பாடுகிறார். கேட்டால் நாங்கள் ததஜவில் பாக்கர் இருக்கும் காலத்திலேயே பதிவு செய்து விட்டோம் என்கிறார். அதை அவரை பின்பற்றும் மூளையை கழற்றி வைத்த கூட்டமும் ஆமோதிக்கிறது.
அட மட சாம்பிரானிகளா! பாக்கர் ததஜவில் இருக்கும் காலத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தால் குறைந்த பட்சம் 2008 என்றல்லவா இருக்கவேண்டும். ஆனால் இந்த கள்ளப் பேர்வழிகள் வெளியிட்டிருக்கும் சான்றிதழில் மார்ச் 2010 என்றல்லவா உள்ளது. இதைக்கூட சிந்திக்க முடியாத ஜாஹில்களாகி விட்டீர்களா? அதுசரி மூளை இருந்தாலல்லவா சிந்திப்பதற்கு? அண்ணன் தொப்பியை மட்டும் கழற்றச் சொல்லவில்லை. தொப்பியோடு சேர்த்து உங்கள் மூளையையும் கழற்றி வாங்கிவிட்டார் போலும்.
சரி ஒரு பேச்சுக்கு பீஜே வகையறாக்கள் சொன்னது போல பாக்கர் ஆரம்பிப்பதற்கு முன்னாடியே பதிவு பண்ணி வச்சிருந்ததாகவே இருக்கட்டும். பாக்கர் இந்த பெயரில் அமைப்பு ஆரம்பிக்கும் போது எங்கே போயிருந்தீர்கள்? இந்த அமைப்பின் பெயரில் இரண்டாண்டுகள் பாக்கர் பல்வேறு பணிகளை செய்யும் போது எங்கே போயிருந்தீர்கள்? இன்றைக்கு சான்றிதழை தூக்கிக்கொண்டு ஓடிவரும் நீங்கள் அன்றைக்கு அல்லவா பாய்ந்து வந்திருக்கவேண்டும்? அன்றைக்கு வராமல் இன்றைக்கு உரிமை கொண்டாடுவதன் நோக்கம் இன்றைக்கு அமைப்பு மக்கள் மத்தியில் பாக்கரின் உழைப்பால் வளர்ந்துவிட்டது. அதை அபகரிப்போம் என்பதுதானே?
சரி! பாக்கர் பதிவு செய்யவில்லை என்றே வைத்துக்கொள்வோம். ஆனால் அவர் பாத்தியதையில் உள்ளதை அபகரிக்க உங்களுக்கு எந்த குர்ஆணும்- ஹதீசும் அனுமதியளிக்கிறது? குர்ஆணும்- ஹதீசும் ஊருக்கு மட்டும் சொல்பவர்கள் தானே நீங்கள்?
இவர்கள் கள்ளப் பேர்வழிகள் என்பதற்கும், இவர்கள் இந்திய தவ்ஹீத் ஜமாத்தில் குழப்பம் விளைவிக்கவே இந்த நாடகம் நடத்துகிறார்கள் என்பதற்கும் ஒரு சான்று என்னவெனில், இவர்கள் புதிதாக ஆரம்பித்து ஆண்ணன் ஆசி வழங்கி 'லிங்க்' கொடுத்த கள்ள வெப்சைட்டில் முதலில் தலைமை அலுவலக முகவரி என்று 30 அரண்மனைக்காரன் தெருவை போட்டார்கள். அடுத்த பத்து நிமிடத்தில் 20 அங்கப்ப நாயக்கன் தெரு என்று போட்டுள்ளார்கள். ஒரு அமைப்புக்கு பத்து நிமிடத்திற்கு ஒரு தலைமை அலுவலகம் மாற்றும் இந்த கள்ளப் பேர்வழிகளிடம் சமுதாயம் கவனமாக இருக்கவேண்டும்.
மூன்றாண்டுகளாக[!] இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரில் இயங்குகிறோம் என்று முழங்கும் இந்த முனாபிக்குகள், தொடர்புக்கு என்று மூன்று முகவரியற்றவர்களை போட்டுள்ளார்கள். தலைவர் இல்லை. செயலாளர் இல்லை. ஆனால் மூன்று வருடம் அமைப்பு நடத்தினார்களாம்.
ததஜவில் உள்ள சகோதரர்கள் உடனடியாக உங்கள் சொத்துக்களை அரசு பதிவேட்டில் பதிவு செய்து விடுங்கள். இல்லையென்றால்... உங்களுக்கே புரியும்!
0 comments:
Post a Comment