Dec 25, 2010

// // Leave a Comment

ஆக்கிரமிப்புப் படையின் தொடர் அராஜகம்

டந்த திங்கட்கிழமை (20.12.2010) ரமல்லாவுக்கு அருகே இஸ்ரேலிய
ஆக்கிரமிப்புப் படை மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 23 வயதான
பலஸ்தீன் இளைஞன் படுகாயமடைந்துள்ளான்.

சம்பவத்தை நேரில் கண்டவர்கள் சாட்சியமளிக்கையில், பதூ பிரதேசத்தில்
எழுப்பப்பட்டுள்ள சட்டவிரோதமான இஸ்ரேலிய பிரிவினைச் சுவருக்கு எதிரான
அமைதிப் பேரணியில் கலந்துகொண்ட போதே மேற்படி இளைஞன் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது எனவும், படுகாயமடைந்து இரத்த வெள்ளத்தில் கிடந்த பொழுதிலும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை குறிப்பிட்ட நேரம்வரை அவனைத் தமது தடுப்புக்காவலில் வைத்திருந்தது எனவும் தெரிவித்துள்ளனர். அதன் பின் உயிருக்குப் போராடும் நிலையில் அவ்இளைஞன் ஹதஸ்ஸாஹ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

இதேவேளை, கடந்த செவ்வாய்க்கிழமை (21.12.2010) ரமல்லா, நப்லஸ்
பிரதேசங்களில் 'தேடுதல் வேட்டை' என்ற போர்வையில் பலஸ்தீன் வீடுகளுக்குள் அத்துமீறிப் பிரவேசித்த இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை பெரும்
அட்டகாசங்களைப் புரிந்துள்ளதோடு, நான்கு பலஸ்தீன் பொதுமக்களைக் கடத்திச் சென்றுள்ளது.

0 comments: