அதிகரித்துள்ளது. தனிநபர்கள் பற்றி இணையத்தில் தீர்ப்பெழுதும்
அவசரப்போக்கு சிலரிடம் மிகைத்துள்ளது.
'தவ்ஹீது' என்ற பெயர் சிலரிடம் சிக்கிக்கொண்டிருப்பதும்,சட்ட காரணங்கள்
சொல்லப்பட்டு சதி,மோசடி,ஏமாற்று,நயவஞ்சகம் இவைகள் எல்லாம் வாய்
ஜாலங்களால் நியாயப்படுத்தப்படுவதும் கவலை தருவதாக உள்ளது. வரம்பு
மீறுவோருடன் அதேயளவு வரம்பு மீறுவதற்கு மார்க்கத்தில்அனுமதியுண்டு.
எனினும்,சிலர் வலிந்துசென்று பிறர் உடமைகளையும் உணர்வுகளையும்
மீறுகின்றனர்.
பாதிக்கப்பட்டவருடைய துஆவுக்கும் அல்லாஹ்வுக்கும் இடையில் எவ்வித
தடையுமில்லை;பாதிக்கப்பட்டவர் காஃபீராகவே இருந்தாலும் அநியாயமாகப்
பாதிப்புக்கப்பட்டிருப்பின்,
கொள்ளப்படும் என்றெல்லாம் சொல்லப்படும் உன்னத மார்க்கத்தின் பிறரின்
பாதிப்புகள்,சகமனிதனின் உணர்வுகள், உரிமைகள் குறித்த கவலையின்றி சிலர்
வரம்பு மீறுகின்றனர்.
சொந்தப்பணத்தைச் செலவுசெய்து அல்லாஹ்வுக்காக அழைப்புப் பணி செய்தவர்களை
இகழ்ந்து ஏசி அறையில்,வெப்கேமரா முன்பு நின்றுகொண்டு பயான் செய்யும்
ஹைடெக் ஆலிம்கள் மலிந்து விட்டபிறகு மெய்யாலுமே இஸ்லாம் எளிய
மார்க்கமாகி'விட்டது!அல்ஹம்துலி
எனினும், அல்லாஹ் வழங்கிய அருட்கொடையை முஸ்லிம்களைத் தூற்றவும்,தமது
வரம்புமீறலை நியாயப்படுத்தவும் தந்திரமாகப் பயன்படுத்துகின்றனர்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சிலநிமிட விளம்பரத்திற்கு ஆயிரக்கணக்கில்
செலவளிக்கும் நிலையில், நம்மிடமுள்ள தொலைக்காட்சி நேரங்களைக்
கணக்கிட்டால் தினந்தோறும் கோடிக்கணக்கான ரூபாயை ஊடகங்களில் செலவு
செய்கிறோம். ஒரு தரப்பினரின் மார்க்கத்தை இன்னொரு தரப்பினர் மறுப்பது
அல்லது சாடுவது, இவர்கள் இருதரப்பிலும் யார் சொல்வது எளிய/ இனிய
மார்க்கம் என்று பாமர முஸ்லிம்களிடம் குழப்பமும் மாற்றாரிடம்
நம்மைப்பற்றிய எள்ளல்களுக்குமே வழிவகுக்கின்றனர்.
ஒரு காலத்தில் தொலைக்காட்சி நம்மைச்சீரழித்துவிடும் என்ற கவலையை
விஞ்சும்படி.தற்போது ஈமெயிலும் இணையமும் சேர்ந்துகொண்டு வலைப்பூக்களில்
இனிய,எளிய மார்க்கத்தினர் போலிப்பெயர்களில் மோதிக் கொள்கின்றனர்.
கூடுதலாக சம்பந்தப்பட்ட அமைப்புத் தலைவர்கள் பெயரில் போலி முகவரியிலும்
தனி மடலிட்டு முஸ்லிம்களிடையே "கொலையை விடக் கொடிய குழப்பத்தை எவ்வித
தயக்கமுமின்றி செய்வது RSS/VHPயினர் அல்லர்.
முஸ்லிமல்லாத தமிழ் இணைய குழுமங்களில்கூட இத்தகைய குடுமிப்பிடி
சண்டைகளும்,வம்படிகளும்,வசவுகளு
கரங்களும்கூட த்த்தமது செயல்களுக்கு அல்லாஹ்விடத்தில் சான்றுபகரும் என்று
நம்பும் முஸ்லிம்கள், தவ்ஹீதை ஏகபோக உரிமை கோருபவர்களும் உள்ளனர் என்பது
கசப்பான உண்மை!
இணையமும்,தொழில் நுட்பம் இவர்களின் கையிலகப்பட்டு சக முஸ்லிம்கள் பாட்டை
நினைக்கும்போது,மஹ்தி, ஈஸா அலை... ஆகியோர்களும்கூட இவர்களிடம் தவ்ஹீது
முத்திரைபெற வேண்டுமோ? என்று நினைக்கும்போது நெஞ்சம் விம்முகிறது.
அல்லாஹ் நம்மை XXXவாதிகளிடமிருந்து பாதுகாப்பானாக! ஆமின்.
0 comments:
Post a Comment