தமுமுக வின் துவக்க காலத்தில் பிலால் எனும் இஸ்லாத்தை ஏற்ற சகோதரருக்கு ஹபிபா எனும் இஸ்லாத்தை ஏற்ற பெண்ணை மண முடித்து வைக்கப் பட்டு இவர்களின் இல்லற வாழ்வில் இரண்டு குழந்தைகளும் இருக்கும் நிலையில் பிலால் எனும் அந்த சகோதரர் போதை பழக்கத்தில் வீழ்ந்து பாதை தவறினார். இதனால் கணவன் மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்தாலும், மாமியாரை கை விடாமல் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து குழந்தைகளையும் அவரையும் காப்பாற்றி வந்தார்.
கணவனோடு இருக்கும் போதே மாமியாரை மதிக்காத இன்றைய பெண்கள் மத்தியில் கணவனை பிரிந்தாலும் அவரை பெற்ற தாயை பேணிப் பாது காத்த இந்தப் பண்பால் அந்தத் தாய் இஸ்லாத்தை ஏற்று மீதியிருக்கும் காலத்தையும் தன மருமகளோடு, அவள் பெற்ற தன் பேரக் குழந்தைகளோடு, அற்புதமான் இந்த இஸ்லாமிய மார்கதோடும் இணைந்து வாழ விரும்பி மருமகளிடம் விருப்பத்தை தெரிவிக்க நேற்று 2.2.12 அன்று .தலைமையகம் அழைத்து வந்தார். அவருக்கு இஸ்லாத்தின் தூய கலிமாவை எஸ்.எம்.பாக்கர் சொல்லிக் கொடுக்க குணாம்மால் எனும் அந்த தாய் பாத்திமா எனும் பெயருடன் இஸ்லாத்தை ஏற்றார்.அல்ஹம்து லில்லாஹ்.
Soure: sengiskhan online
0 comments:
Post a Comment