தாடி வைத்திருப்பவர்கள் இனி அரசு வேலைக்கு விண்ணப்பிக்க முடியாது. பணியில் இருப்பவர்களும் தாடி வைக்க முடியாது. ஆம், ஜப்பானின் கன்மா மாகாணத்தில் உள்ள இசேசகி நகர நிர்வாகம், ஊழியர்கள் தாடி வளர்ப்பதற்கு தடை விதித்துள்ளது.
ஜப்பானில் அரசு ஊழியர்களுக்கு இதுபோன்ற தடை விதிக்கப்பட்டிருப்பது இதுதான் முதல் முறை. ‘கூல் பிஸ்’ என்ற வருடாந்திர அலுவலக ஆடை விதிகளின் ஒரு பகுதியாக இந்த தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, ஆண் ஊழியர்கள் கோடைகாலத்தில் மேலாடை இல்லாமல் பணிபுரியலாம். இதன்மூலம் ஏசி பயன்பாடு குறைந்து பூமி வெப்பமயமாவது குறையும் என ஜப்பான் அரசு கருதுகிறது.
‘‘தாடி வைத்துள்ள ஊழியர்களை பார்க்க அறுவறுப்பாக உள்ளதாக பொதுமக்களிடமிருந்து புகார்கள் வந்தன. இதையடுத்து, ஊழியர்கள் முகத்தில் மீசை, தாடி வளர்ப்பதற்கு தடை விதித்துள்ளோம். இது ஒருவரின் தனிப்பட்ட சுதந்திரமாக இருந்தாலும் அரசு ஊழியர்கள் மிடுக்காக இருக்க வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம்’’ என கன்மா மாகாண உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment