Aug 29, 2010

// // Leave a Comment

கட்டாய திருமணப் பதிவுச் சட்டம் சம்பந்தமாக தமிழக அரசின் அரசாணை!

தமிழக அரசு இயற்றியுள்ள கட்டாய திருமண பதிவு சட்டத்தில் சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்தினருக்கு எத்தகைய பாதிப்பும் ஏற்பாடத வகையில் உரிய திருத்தங்கள் செய்யப்பட்டு அதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அல்ஹம்துலில்லாஹ். எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!

நாடு முழுவதும் நடைபெறும் திருமணங்கள் அனைத்தும் கட்டாய பதிவு செய்யப்பட வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு திருமண கட்டாய பதிவு சட்டத்தை கொண்டு வந்தது. இதற்கான சட்ட முன்வடிவு தமிழ்நாடு சட்ட மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு கடந்த 2009 ஜூலையில் நடைமுறைக்கு வந்தது.

இச்சட்டம் பொது சிவில் சட்டத்திற்கு வழி வகுக்கும் என கூறி ஆரம்பித்திலிருந்து நமது இந்திய தவ்ஹீத் ஜமாஅத் எதிர்த்தது. இது சம்பந்தமாக அனைத்து சமுதாய அமைப்புகளின் தலைவர்களை சந்தித்து அதன் பாதகங்களை விளக்கி அவர்களை ஒருமுகப்படுத்தியது. அதன் அடிப்படையில் இவ்வருடம் கடந்த பிப்ரவரி மாதம் 22 அமைப்புகளை கொண்ட ஒரு ஆலோசனைக் கூட்டத்தில் 9 பேர்கள் கொண்ட ஒரு குழு இது சம்பந்தமாக விவாதிப்பதற்காக அமைக்கப்பட்டது.

மேலும் இது சம்பந்தமாக அனைத்து முஹல்லா ஜமாஅத்தினருக்கும் நம் மாநிலத் தலைவர் எஸ்.எம் பாக்கர் அவர்கள் கடிதம் ஒன்றை எழுதினார். தமிழகம் முழுவதும் இது சம்பந்தமாக தெருமுனைப் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும்அறிக்கைகள் வெளியிடப்பட்டன.

இறுதியாக கடந்த மார்ச் 6ஆம் தேதி சட்டத்துறை அமைச்சர் துரை முருகன் அவர்களை 9 பேர்கள் கொண்ட வல்லுநர் குழு சந்தித்து, நம் சமுதாயத்தின் கோரிக்கையான கட்டாய பதிவு திருமணச் சட்டத்தின் ஷரத்துக்கள் மாற்றப்பட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது. அதை தன் அதிகாரிகளுடன் ஆலோசித்த அமைச்சர், இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு பாதகம் இல்லாத முறையில் கட்டாய திருமணப் பதிவுச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும், அது அரசாணையாக வெளியிடப்படும் என உறுதியளித்தார்.

அல்ஹம்துலில்லாஹ். கண்ணியமிக்க இந்த ரமதான் மாதத்தில் தமிழக அரசு அதை கொண்டு வந்துள்ளது. விழித்து இருக்கும் நேரமெல்லாம் வீறு கொண்டு சமுதாயப் பணியாற்றும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் முயற்சிக்கு ஏக இறைவன் வெற்றியை அளித்துள்ளான். இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் முயற்சிக்கு தோளோடு தோள் நின்று குரல் எழுப்பிய அனைத்து சமுதாய அமைப்புகளுக்கும் அல்லாஹ் நல்லருள் பாலிக்கட்டும் என துஆச் செய்கின்றோம்.


0 comments: